சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதராசா பள்ளி ஆசிரியருக்கு 11 ஆண்டுகள் சிறை

துமகூருவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதராசா பள்ளி ஆசிரியருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து துமகூரு மாவட்ட சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2021-08-01 20:17 GMT
பெங்களூரு:

சிறுவனுக்கு பாலியல் தொல்லை

  துமகூரு மாவட்டம் புறநகரில் ஒரு மதராசா பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் ஆசிரியராக முஷரப் என்பவர் இருந்து வந்தார். அவரது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் ஆகும். அந்த பள்ளியில் 13 வயது சிறுவன் தங்கி படித்து வந்தான். கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-்ந் தேதி மதராசா பள்ளிக்கு சிறுவனின் தாய் சென்றிருந்தார். அப்போது தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி அந்த சிறுவன் தாயிடம் கூறினான்.

  அதாவது மதராசா பள்ளி ஆசிரியர் முஷரப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு மிரட்டல் விடுத்து தொல்லை கொடுப்பதாகவும் தாயிடம் சிறுவன் கூறி இருந்தான். இதுகுறித்து துமகூரு புறநகர் போலீஸ் நிலையத்தில் சிறுவனின் தாய் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், ஆசிரியர் முஷரப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ஆசிரியர் முஷரப்பும் கைது செய்யப்பட்டு இருந்தார்.

ஆசிரியருக்கு 11 ஆண்டுகள் சிறை

  இந்த சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணை துமகூரு மாவட்ட சிறப்பு கோர்ட்டில் நீதிபதி கிருஷ்ணய்யா முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் காயத்திரி ஆஜராகி வாதிட்டு வந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கிருஷ்ணய்யா தீர்ப்பு கூறினார்.

  அப்போது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதராசா பள்ளி ஆசிரியரான முஷரப்புக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்