ஆர்ப்பாட்டம்
தென்காசியில் பசும்பொன் தேசிய கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சரை கண்டித்து தென்காசி கீழப்புலியூரில் பசும்பொன் தேசிய கழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் துரை தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜான்சன், துணை செயலாளர் கார்த்திக், இளைஞரணி செயலாளர் சுரேஷ், தொழில்நுட்ப பிரிவு தலைவர் இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.