நெல்லை மாவட்டத்தில் இதுவரை 102 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாவட்டத்தில் இதுவரை குண்டர் சட்டத்தில் 102 பேர் கைது செய்ய்பட்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 1.1.2021 முதல் இது வரையிலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 102 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி ஆகிய வழக்குகளில் ஈடுபட்ட 82 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர், சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 6 பேர், மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் என மொத்தம் 102 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தி, அவர்களது நடவடிக்கைகளை முற்றிலும் கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சாக எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.