6 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

6 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை.

Update: 2021-08-01 17:03 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்து உள்ளது. சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி இல்லை என்றாலும் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இதனால் நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தொற்று பரவலை தடுக்க தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  சமூக இடைவெளி, கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் போன்றவற்றை கடைப்பிடிக்காத நபர்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

நீலகிரியில் தினமும் 2,700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை 6 லட்சத்து 26 ஆயிரம் பேரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்