முத்தாரம்மன் கோவில் தடுப்புவேலிகள் முன்பு நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தடுப்புவேலிகள் முன்பு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
கொரோனா பரவல் காரணமாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரையிலும், மற்றும் 8-ந் தேதியும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதனால் முத்தாரம்மன் கோவில் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் தடுப்பு வேலி முன்பு நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.