லிப்ட் கொடுக்க மறுத்த தொழிலாளி மீது தாக்குதல்; 2 பேர் கைது

லிப்ட் கொடுக்க மறுத்த தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-01 16:46 GMT
கம்பம்:
கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்துவிட்டு கம்பம் புறவழிச்சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். உதயம் நகர் சந்திப்பு பகுதியில் அவர் வந்தபோது, க.புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் (19) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தி ‘லிப்ட்’ கேட்டுள்ளார். 
அதற்கு மணிமாறன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அருகில் கிடந்த கல்லை எடுத்து மணிமாறனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார். இதற்கிடையே ராேஜசின் நண்பர்களான கம்பம்மெட்டு காலனியை சேர்ந்த சசிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் வந்தனர். அவர்களும் ராஜேசுடன் சேர்ந்து மணிமாறனை தாக்கினர். 
பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மணிமாறனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ், சசிக்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சதீஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்