புகைப்பட்டி கிராமத்தில் கூழ் குடத்துடன் பெண்கள் ஊர்வலம்
புகைப்பட்டி கிராமத்தில் கூழ் குடத்துடன் பெண்கள் ஊர்வலம்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் மிகவும் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் இந்த கோவிலில் சாகை வார்த்தல் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு சாகை வார்த்தல் திருவிழா நடைபெற்றது. காளி வேடம் அணிந்த பூசாரி மேளதாள இசையுடன் ஊருக்கு வெளியே சென்று படையலை முடித்துவிட்டு பின்னர் கோவிலுக்கு திரும்பினார். அப்போது வழியில் அந்தந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தலையில் கூழ் குடத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த இந்த ஊர்வலம் பின்னர் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சாகை வார்த்தல் விழா நடைபெற்றது. அம்மனுக்கு படைக்கப்பட்ட கூழ் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இறுதியாக புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் கோவிலுக்கு முன்பாக உள்ள கழு மரத்தை சுற்றி கும்மி அடித்து அம்மனை பாடி மகிழ்ந்தனர்.