அரசு அலட்சியமாக ெசயல்பட்டால் கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை தவிர்க்க முடியாது - சித்தராமையா எச்சரிக்கை

அரசு அலட்சியமாக ெசயல்பட்டால் கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலைைய தவிர்க்க முடியாது என்று சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-07-31 19:59 GMT
மைசூரு:
  
காங்கிரஸ் கட்சி கூட்டம்

  மைசூருவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

  முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சித்தராமையா தனியார் ஓட்டலுக்கு வந்தார். அவர் தனியார் ஓட்டல் முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தவிர்க்க முடியாது

  கேரளாவில் கொரோனா 3-வது அலை தொடங்கி உள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர், மங்களூரு வழியாக ஏராளமான மக்கள் கர்நாடகத்துக்கு வருகிறார்கள். இதனால் கர்நாடகத்திலும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, கேரளாவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு சோதனை நடத்த ேவண்டும். அதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க ேவண்டும். கர்நாடகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ேவண்டியது மாநில அரசின் கடமை. கொரோனா விஷயத்தில் மாநில அரசு அலட்சியமாக ெசயல்பட்டால் கர்நாடகத்தில் 3-வது அலையை தவிர்க்க முடியாது. நாமே 3-வது அலையை வரவழைத்தது போல ஆகிவிடும்.

  கர்நாடகத்திலும் ெகாரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் 3-வது அலையை தடுக்க மாநில அரசு முன்ெனச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

அதிகாரிகளுக்கு பொறுப்பு இல்லையா?

  கர்நாடகத்தில் மந்திரிகள் இல்லாமல் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மந்திரிகள் தான் வேண்டுமா?. அதிகாரிகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கூடாதா?. அதிகாரிகளுக்கு பொறுப்பு கிடையாதா?. அனைத்துக்கும் மந்திரிகளை எதிர்பார்க்காமல் அதிகாரிகள் பணியாற்ற ேவண்டும். அரசாங்கம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிகாரிகள் தங்கள் பணிகைள ெபாறுப்புடன் ெசய்ய வேண்டும்.

  மந்திரிகள் இருந்தால் தான் கொரோனா பரிசோதனை நடத்துவார்களா?. அனைத்து மாவட்ட கெலக்டர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்