வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் வரலாற்று சிறப்பு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் காலபைரவருக்கு மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இதில் காலபைரவர் செவ்வரளி மலர் அலங்காரத்தில் வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் குட்லாடம்பட்டி கண்மாய் அருகில் 36 அடி உயர அண்ணாமலையார் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அர்ச்சனை, அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆடி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, மதுரை தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காலபைரவர் வடை மற்றும் ஜிலேபி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.