நொய்யல்
கரூர் மாவட்டம், தோட்டகுறிச்சியில் தோகை கலாம் நற்பணி மன்றம் மற்றும் புகளூர் காகிதஆலை நிறுவனம் இணைந்து நடத்திய அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா தோட்டக்குறிச்சி பகுதியில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கரூர் கோல்டு பைனான்ஸ் நிறுவனர் தோகை முருகன் கலந்து கொண்டு தலைமை வகித்து அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் .பின்னர் அப்துல் கலாமின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார் . தோட்டக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த அமைப்பு சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. விழாவில் தோகை கலாம் நற்பணி மன்ற நிர்வாகிகள், காகித ஆலை அதிகாரிகள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.