ஆடி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் ஆடி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-07-31 17:58 GMT
திருத்துறைப்பூண்டி;
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் ஆடி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
பொங்கு சனீஸ்வரர் கோவில்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பகுதியில் பூவிலும் மெல்லிடையாள், அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. பொங்கு சனீஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு சனிக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். 
திரளான பக்தர்கள்
நேற்று ஆடி சனிக்கிழமையையொட்டி திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வழிபாட்டில். அரசு விதிமுறையை பின்பற்றி அர்ச்சனை செய்யாமல் விளக்கு ஏற்ற  அனுமதிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைமை குருக்கள் குமார், கோவில் செயல் அலுவலர் சுரேந்தர், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்