செஞ்சி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
செஞ்சி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடு போனது.
செஞ்சி,
விழுப்புரம் அருகே உள்ள அரசலாபுரத்தை சே்ாந்தவர் கோவிந்தசாமி மகன் பெருமாள் (வயது 57). இவரது மனைவி சாந்தி. நேற்று காலை சாந்தி, வேலைக்கு சென்றுவிட்டார். பெருமாள் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றவர், மதியம் வீட்டுக்கு வந்தார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 3 ½பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பெருமாள் கஞ்சனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.