பண்ருட்டியில் சாராயம் கடத்தியவர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

பண்ருட்டியில் சாராயம் கடத்தியவர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-31 16:34 GMT
கடலூர், 

பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பண்ருட்டி திருவதிகை ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மொபட்டை வழிமறித்து, அதில் இருந்த பையை சோதனை செய்ததில், சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மொபட்டில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், கீரப்பாளையத்தை சேர்ந்த காசிலிங்கம் என்கிற காட்டுராஜா (வயது 51) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காசிலிங்கத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

குண்டர் சட்டம்

கைதான காசிலிங்கம் மீது நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் 3 சாராய வழக்குகளும், காடாம்புலியூரில் ஒரு சாராய வழக்கும் உள்ளது. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, காசிலிங்கத்தை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதன்பேரில் காசிலிங்கத்தை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிலிங்கத்திடம், அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்