அதியமான்கோட்டை அருகே பஸ் மீது லாரி மோதல் 4 பேர் காயம்

அதியமான்கோட்டை அருகே பஸ் மீது லாரி மோதி 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-07-31 16:26 GMT
நல்லம்பள்ளி:
தர்மபுரியில் இருந்து நாமக்கல்லுக்கு லாரி ஒன்று அதியமான்கோட்டை அருகே உள்ள அவ்வை வழி பைபாஸ் பிரிவு சாலை வழியே நேற்று சென்றது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் 2 பேர் வந்தனர். அப்போது முன்னால் சென்ற தனியார் பஸ் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 4 பேர் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்