திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

Update: 2021-07-31 16:02 GMT
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  சிகிச்சை பலனின்றி 6 பேர் பலியாகினர். 
78 பேருக்கு கொரோனா 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் கொரோனா தொற்று குறைய தொடங்கியது. 
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
6 பேர் பலி 
இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 801-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 133 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 966-ஆக உள்ளது. 
இதுபோல் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1004 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 831-ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்