காங்கேயம் மற்றும் முத்தூரில் 1,310 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
காங்கேயம் மற்றும் முத்தூரில் 1,310 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
காங்கேயம்:
காங்கேயம் மற்றும் முத்தூரில் 1,310 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி
காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 210 பேருக்கும், பாப்பினி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 190 பேருக்கும், காங்கேயம் - திருப்பூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 290 பேருக்கும், மொத்தம் 690 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ராசாத்தாவலசு அரசு நடுநிலைப்பள்ளி, ஆகிய 2 இடங்களில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் முத்தூர் சுகாதாரத்துறையினர் மொத்தம் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
நத்தக்காடையூர்
நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை அரசு நடுநிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் மருத்துவ குழுவினர் 220 பேருக்கு தடுப்பூசிகளையும் போட்டனர். இதன்படி காங்கேயம், முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 1,310 பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முதல் தவணை 23 ஆயிரத்து 280 பேருக்கும் , 2-ம் தவணை 4 ஆயிரத்து 139 பேருக்கும் போடப்பட்டுள்ளது. கோவேக்சின் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 2 ஆயிரத்து 96பேருக்கும், 2-ம் தவணை 1,297 பேருக்கும் போடப்பட்டு வருகிறது, இதுவரை மொத்தம் 30 ஆயிரத்து 812 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.