குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது - திருவிடைமருதூரை சேர்ந்தவர்

திருவிடைமருதூர் வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2021-07-31 15:38 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பாலாக்குடி வடக்குதெருவை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகன் பாரதி (வயது33). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து பாரதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பாரதியை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்