தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்கு
தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நீடாமங்கலம்,
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றக்கோரி நீடாமங்கலம் பேரூராட்சி 15 வார்டுகளிலும் அ.தி.மு.க. சார்பில் கடந்த 28-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். இதைப்போல நீடாமங்கலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மேலபூவனூர் கிராமத்தில் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஆதிஜனகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர் மீது நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.