புதிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நியமனம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்குள புதிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-31 13:57 GMT
திருப்பத்தூர்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்குள புதிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் 16 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து அந்த துறையின் கமிஷனர் மற்றும் இயக்குனரான ஜானி டாம்வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு விழுப்புரம் மாவட்டத்துக்கும், திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் அரியலூர் மாவட்டத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் வேலூருக்கும், சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி திருப்பத்தூருக்கும், சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் ராணிப்பேட்டைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்