சீர்காழி அருகே சைக்கிளில் சென்ற முதியவர் கார் மோதி பலி
சீர்காழி அருகே சைக்கிளில் சென்ற முதியவர் கார் மோதி பலியானார்.
சீர்காழி,
சீர்காழி அருகே மேலச்சாலை கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 70). விவசாயியான இவர், நேற்று மாலை சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோவில் ஆர்ச் எதிரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராமல் ைசக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த முதியவர் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் விரைந்து வந்து, எத்திராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.