பந்தலூர்
பந்தலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட அம்பலமூலா அருகே உள்ள பாம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இவருடைய மனைவி சோபா(வயது 42). இவரை நேற்றுமுன்தினம் இரவு முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டின் அருகே இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பலமூலா போலீசார் நேரில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.