முன்விரோதம் காரணமாக தந்தை- மகனை தாக்கிய 8 பேர் மீது வழக்கு

முன்விரோதம் காரணமாக தந்தை- மகனை தாக்கிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-07-30 20:52 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரை சேர்ந்தவர் முகமது கனி. இவரது மகன்கள் அமானுல்லா (வயது 30), சேக்முகமது (28). அதே ஊரை சேர்ந்த சர்புதீனின் மகள் சர்மிளாபேகத்திற்கும், சேக்முகம்மதுவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து உள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் முகமதுகனி குடும்பத்திற்கும், சர்புதீன் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் முகமதுகனியும், அவரது மகன் அமானுல்லாவும் கை.களத்தூரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று முன்தினம் தொழுகைக்கு சென்றனர். அப்போது சர்புதீன் உறவினர்களும் தொழுகைக்கு சென்றனர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முகமதுகனி, அமானுல்லா ஆகியோரை சர்புதீனின் உறவினர்களான சபியுல்லா, சேட்டுமுகமது, ஷாஜகான், இஸ்மாயில், மீராசா, மைதீன் பீவி, ஜாஸ்மின், சர்மிளா உள்ளிட்ட 8 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முகமதுகனி, அமானுல்லா ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அமானுல்லா கொடுத்த புகாரின்பேரில் 8 பேர் மீது கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்