11 கிலோ வெள்ளி தகடுகள் மூலம் தயாரான பல்லக்கு

11 கிலோ வெள்ளி தகடுகள் மூலம் தயாரான பல்லக்கு

Update: 2021-07-30 20:39 GMT
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான 11 கிலோ 720 கிராம் வெள்ளி தகடுகள், 18 கிலோ 361 கிராம் பித்தளை தகடுகள் மற்றும் தேக்கு மரங்கள் காணிக்கையாக வந்தது. இதனையடுத்து கோவில் தக்கார் செல்லத்துரை உத்தரவின்பேரில கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி மேற்பார்வையில் தேக்குமரத்தில், காணிக்கையாக வரப்பட்ட வெள்ளி தகடுகள், பித்தளை தகடுகள் பொருத்தப்பட்டு பல்லக்கு தயார் செய்யப்பட்டது. ஐப்பசி மாதத்தில் நடைபெறக்கூடிய கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி புறப்பாட்டில் இந்த பல்லக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்