மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - குமாரசாமி வலியுறுத்தல்

மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-07-30 20:28 GMT
பெங்களூரு:

  முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

மேகதாது திட்டம்

  மேகதாது அணை கட்டும் விஷயத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருப்பவர்கள் யார். தமிழ்நாட்டில் அ.தி.மு.க., மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க.வும் அதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சொல்கின்றன.

  மேகதாது திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளத்திருப்பதாக அங்குள்ள 2 முக்கிய கட்சிகள் கூறுகின்றன. கர்நாடகத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி தமிழ்நாட்டில் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளவர், மேகதாது திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளார். மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுகின்றன. ஆனால் கர்நாடகத்திற்கு அரசியல் கட்சிகள் இடையே அத்தகைய ஒற்றுமை இல்லை.

மத்திய அரசின் அனுமதி

  கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். அவ்வாறு கூறினால் மட்டும் போதாது, அந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கேமதாது தி்டடத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று கூறிய முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மத்திய அரசின் அனுமதியை பெறவே இல்லை.

  இப்போது அந்த திட்டத்தை செயல்படுத்துவதாக பசவராஜ் பொம்மை சொல்கிறார். இது வெறும் வார்த்தைகளில் மட்டும் இருந்தால் போதாது. மத்திய அரசிடம் அனுமதி பெற விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த திட்டத்தை ஜனதா தளம் (எஸ்) கட்சி எப்போதும் ஆதரிக்கிறது. நாங்கள் கவர்னரை சந்தித்து, மேகதாது திட்டம் குறித்து கடிதம் வழங்கியுள்ளோம். பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.
  இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்