பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-30 19:29 GMT
கரூர்
நொய்யல்
கரூர் மாவட்டம், பாலத்துறை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி சாவித்திரி (வயது 50). இவர் ஆடுகளை வளர்த்தும், மேய்த்தும் வருகிறார். சாவித்திரியின் உறவுக்காரரான திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் தினேஷ் (36) என்பவர் இப்பகுதிக்கு வந்து பாலத்துறையில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று தினேஷ், தனது உறவினரான சாவித்திரியிடம் மதுக்குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பணமில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து  வேலாயுதம்பாளையம் போலீசில் சாவித்திரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்