யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-30 19:04 GMT
ராதாபுரம்:

ராதாபுரம் பஞ்சாயத்து காரியாகுளம், கணபதிநகர், செம்மன்குளம், சுப்பிரமணியபேரி, தியாகராஜபுரம் பகுதி மக்கள் நேற்று ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளரிடம் மனு வழங்கினர். அதில், ‘ராதாபுரம் பஞ்சாயத்து 1, 2-வது வார்டு பகுதிகளான காரியாகுளம், கணபதிநகர், செம்மன்குளம், சுப்பிரமணியபேரி, தியாகராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை ராதாபுரம் யூனியன் 8-வது வார்டில் இருந்து நீக்கி, 7-வது வார்டில் சேர்த்து உள்ளனர்.

ராதாபுரம் பஞ்சாயத்து 1, 2-வது வார்டில்தான் தாலுகா அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, அரசு கால்நடை ஆஸ்பத்திரி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. எனவே நாங்கள் வசிக்கும் பகுதிகளை தொடர்ந்து ராதாபுரம் யூனியன் 8-வது வார்டிலேயே நீடிக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.

மேலும் செய்திகள்