தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேர் கைது

தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேர் கைது

Update: 2021-07-30 18:29 GMT
சிப்காட் 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆளூர் மண்டலம் குருனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (வயது 32) தொழிலதிபரான இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்த நிலையில் வெங்கடேஸ்வரலுவை சிலர் காரில் கடத்தி ராணிப்பேட்டை பகுதிக்கு வந்ததாக ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் வெங்கடேஸ்வரலு செல்போன் சிக்னலை வைத்து மேல்விஷாரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் வெங்கடேஷ்வரலு காரில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் மீட்டனர். மேலும் காரில் இருந்த ஆம்பூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், ராணிப்பேட்டையை அடுத்த தென்நந்தியாலம் பகுதியைச் சேர்ந்த அருண் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் செல்போன் டவர் அமைப்பதில் வெங்கடேஷ்வரலு ரூ.40 லட்சம் வாங்கிக்கொண்டு பலரிடம் மோசடி செய்ததால் அவரை கடத்தி வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், அருண் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். தப்பி ஓடிய சங்கர், மற்றும் மோகன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்