கர்ப்பிணியை உதைத்த 2 பேர் கைது

கறம்பக்குடி அருகே கர்ப்பிணியை உதைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-30 17:40 GMT
கறம்பக்குடி, ஜூலை.31-
கறம்பக்குடி அருகே கர்ப்பிணியை உதைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்ப்பிணி
கறம்பக்குடி அருகே உள்ள இலைகடி விடுதி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அபிராமி, (வயது 32). நிறைமாத கர்ப்பிணியான இவர் கறம்பக்குடியில் இருந்து மொபட்டில் சென்றார். அப்போது, முன்னாள் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுப்பட்டியைச் சேர்ந்த அழகர், மோகன்ராஜ் ஆகியோர் எச்சில் துப்பியுள்ளனர். இது அபிராமி மீது பட்டதால் தட்டிகேட்டுள்ளார்.
2 பேர் கைது
இதனால் ஆத்திரம் அடைந்த அழகர், மோகன்ராஜ் ஆகியோர் அபிராமியை காலால் எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறிய அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து அபிராமி கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து அழகர், மோகன்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்