பேரணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

Update: 2021-07-30 17:27 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனன். அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் சூரியா (வயது 14). 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் சூரியா தனது பெற்றோருடன் அமர்ந்து மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு கிணற்றுப்பகுதிக்கு கை கழுவ சென்ற போது  எதிர்பாராவிதமாக சுமார் 84 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 36 அடி தண்ணீர் இருந்ததலால் தண்ணீரில் மூழ்கினான்.

இதுபற்றி தகவலறிந்த மேல்பட்டி போலீசார், குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய சிறுவன் சூரியாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் சூரியா இறந்துவிட்டான். அதைத்தொடர்ந்து சூரியாவின் உடல் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மேல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்