திருக்கோவிலூரில் கோர்ட்டு ஊழியரிடம் தகராறு தொழிலாளி கைது

திருக்கோவிலூரில் கோர்ட்டு ஊழியரிடம் தகராறு தொழிலாளி கைது

Update: 2021-07-30 16:49 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அஞ்சாமணி(வயது 36). கட்டிட தொழிலாளியான இவர் வழக்கு விசாரணைக்காக நேற்று திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் கோர்ட்டு எழுத்தர் சேவியர் ராஜ் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அஞ்சாமணி குடிபோதையில் சேவியர்ராஜிடம் தகராறு செய்து அவரை பணிசெய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேவியர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து அஞ்சாமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்