பெயிண்டர் தலை துண்டித்து கொலை

கோவில்பட்டியில் பெயிண்டர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-07-30 16:47 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பெயிண்டர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெயிண்டர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் பொய்யாழி. இவருடைய மகன் மதன்குமார் (வயது 21). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிச் சென்றார்.
பின்னர் மதன்குமார் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. எனவே, அவரை குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

தலை துண்டித்து கொலை

நேற்று காலையில் கோவில்பட்டி மந்திதோப்பு மலையடிவார காட்டு பகுதியில் மதன்குமார் கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது தலை துண்டாகி தொங்கிய நிலையில்  இருந்தது.  எனவே,  மர்ம நபர்கள் அவரை தலை துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் குருசித்திர வடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த மதன்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் கடத்தி சென்று தலை துண்டித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். கோவில்பட்டியில் பெயிண்டர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்