பாதுகாப்பு உபகரணமின்றி சுத்தம் செய்யும் பணியாளர்

பாதுகாப்பு உபகரணமின்றி சுத்தம் செய்யும் பணியாளர்

Update: 2021-07-30 15:23 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை அகற்றும் வகையில், மாநகர் பகுதிகளில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை தொட்டிகளில் சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் தினமும் வாகனங்களில் வந்து அகற்றி வருகிறார்கள். 
இதுபோல் மாநகர பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அடைப்பு ஏற்பட்டுள்ள கால்வாய்கள், நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய்கள் போன்றவற்றை சுகாதார பணியாளர்கள் சுத்தம் செய்கிறார்கள். இந்நிலையில் திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாயை நேற்று சுகாதார பணியாளர் ஒருவர் பாதுகாப்பு உபகரணமின்றி சுத்தம் செய்தார். 
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 
திருப்பூர் நெசவாளர்காலனியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனை மாநகராட்சி சுகாதார பணியாளர் ஒருவர் சுத்தம் செய்தார். ஆனால் அவர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இன்றி இந்த பணியில் ஈடுபட்டார்.
இதுபோல் மாநகராட்சி பகுதிகளில் சிலர் பாதுகாப்பு உபகரணமின்றி இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் முறையாக பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இதனை சுகாதார பணியாளர்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்