ஆயுர்வேத மருத்துவ முகாம்

ஆயுர்வேத மருத்துவ முகாம்

Update: 2021-07-30 14:30 GMT
திருப்பூர்:
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் தொற்று குறைந்துள்ளது. இருப்பினும் 3-வது அலை வர வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்பூர் அரசு மருத்துவமனை ஆயுர்வேத பிரிவு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அதன்படி நேற்று திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கரட்டாங்காட்டில் பொதுமக்கள் 175 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தசமூலகடுத்ரய கஷாயம், அம்ருத்தோத்தரம் கஷாயம் உள்ளிட்ட மருந்துகளை அரசு மருத்துவமனை ஆயுர்வேத பிரிவு டாக்டர் கவிதா வழங்கினார். மேலும், 3-வது அலை ஏற்பட்டால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மேலும் செய்திகள்