கொரோனா தொற்று தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம்
கொரோனா தொற்று தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடங்களுக்கான மருந்தாளுனர், ஆய்வுக்கூட நுட்புநர் மற்றும் நுண்கதிர் வீச்சாளர் பணியிடங்கள் பட்டாய படிப்பு 2-ம் ஆண்டு முடித்தவர்களிடம் இருந்து 6 மாதங்களுக்கு தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்த ஊதியமாக மாதத்துக்கு ரூ.12 ஆயிரத்தில் 14 மருந்தாளுனர், 14 ஆய்வுக்கூட நுட்புநர், 14 நுண்கதிர் வீச்சாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்தப் பணி நியமனங்கள் நேர்காணல் மூலமாக நிரப்பப்படும். எனவே மருந்தாளுனர் பதவிக்கு வருகிற 3-ந் தேதியும், நுண்கதிர் வீச்சாளர் பதவிக்கு 4-ந் தேதியும், ஆய்வுக்கூட நுட்புநர் பதவிக்கு 5-ந் தேதியும் திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் நேர்காணல் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் உரிய அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரலாம்.
மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.