சீர்காழி அருகே, வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு பிடிபட்டது
சீர்காழி அருகே வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு பிடிபட்டது.
சீர்காழி,
சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி தென்றல் நகரில் வசிப்பவர் இளையராஜா (வயது 43). இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவருடைய மாடி வீட்டின் முன்பு அகல்விளக்கு மூட்டைகள் ஏராளமாக அடுக்கி வைத்துள்ளார். இந்த மூட்டைகளின் அருகில் நல்ல பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த, அவர் பாம்பு பிடிக்கும் பாண்டியன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அகல்விளக்கு மூட்டைகளின் இடையில் பதுங்கி இருந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தார். இதைத்தொடர்ந்து இளையராஜா குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.