கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அனுமதியின்றி பேனர் வைத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அனுமதியின்றி பேனர் வைத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு.

Update: 2021-07-30 06:02 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சசிகுமார், வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் திவாகர் ஆகியோர் அனுமதியின்றி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஐகோர்ட்டு உத்தரவை மீறி பேனர் வைத்து இருந்ததை கண்டனர். இதை தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்ததாக சசிகுமார், திவாகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்