மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலினுக்கு, வீரவன்னியர் பேரவை பாராட்டு

மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலினுக்கு, வீரவன்னியர் பேரவை பாராட்டு.

Update: 2021-07-30 00:12 GMT
சென்னை,

வீரவன்னியர் பேரவை தலைவர் டி.தமிழரசு, பொதுச்செயலாளர் பி.அன்பரசு, பொருளாளர் பி.வி.மோகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்பிறகு தான் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு விவகாரம் பெரியளவில் பேசப்பட்டது. இந்தநிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு தொடர்பான அரசாணை வெளியிட்டு வன்னியர் சமுதாய மக்களின் உள்ளங்களில் பால் வார்த்துள்ளார்.

இதற்காக 2½ கோடி வன்னிய மக்கள் சார்பாக வீரவன்னியர் பேரவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோடான கோடி நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது. இதன்மூலம் வன்னிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றி எங்கள் இதயங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்