தாளவாடி பகுதியில் முட்டைகோஸ் பயிரில் இலைசருகு நோய் தாக்குதல்
தாளவாடி பகுதியில் முட்டைகோஸ் பயிரை இலைசருகு நோய் தாக்கியுள்ளது.
தாளவாடி,
தாளவாடி பகுதியில் முட்டைகோஸ் பயிரை இலைசருகு நோய் தாக்கியுள்ளது.
நோய் தாக்குதல்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளது. தாளவாடி சுற்றுவட்டார கிராமமான திகனாரை, கெட்டவாடி, அருள்வாடி, தொட்டகாஜனூர், தலமலை, ஆசனூர், மாவள்ளம் குளியாடா பகுதியில் அதிக அளவில் முட்டைகோஸ், பயிர்செய்துள்ளனர். இது மொத்தம் 3 மாத கால பயிராகும்.
தற்போது 2 மாதமே ஆன இந்த பயிரில் இலைசருகு நோய் தாக்கி உள்ளது. இதனால் பயிர்கள் கருக தொடங்கி உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது-
ஆலோசனை
முட்டைகோஸ் பயிரில் ஏற்பட்ட நோய் தாக்குதலை தடுக்க தனியார் மருந்து கடைகளில் மருந்து வாங்கி தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. பணம் வீணானது தான் மிச்சம்.
கடன் வாங்கி பயிர் செய்து இப்போது பயிர்கள் நோய் தாக்கி கருக தொடங்குவது எங்களை வேதனைப்படுத்தியுள்ளது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது பற்றி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.