பேரையூர்,
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவின்பேரில், டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில், மரக் கன்றுகள் நடும் வார விழா நடைபெற்றது. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புளியம்பட்டி, டி.குன் னத்தூர், ரெங்கபாளையம், கொட்டாணிபட்டி, கெஞ்சம்பட்டி, நல்லமரம் உள்பட 18 ஊராட்சிகளில் பலன் தரக்கூடிய மரக்கன்றுகள் மற்றும் நிழல் தரக்கூடிய மரக்கன்றுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆஷிக், வள்ளி மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் கண்ணன், குமரேசன், ஒன்றிய மேற்பார்வையாளர் பாரதி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.