வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

திருவாடானை அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2021-07-29 19:04 GMT
தொண்டி,

திருவாடானையில் இருந்து அஞ்சுகோட்டை செல்லும் சாலையில் சமத்துவபுரத்தை அடுத்த குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 52.). தச்சுத் தொழிலாளி. இவர் வீட்ைட பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். யாரோ மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து 4¾ பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்