2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டையை அடுத்த தருவையை சேர்ந்தவர் ஆணைக்குட்டி மகன் உய்க்காட்டான் (வயது 20). இவர் மீது சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. தாழையூத்தை சேர்ந்தவர் பால்துரை என்ற பாலாஜி (40). இவர் மீது கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை வழக்குகள் உள்ளன.
அவர்கள் 2 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று உய்க்காட்டான், பால்துரை ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.