48 பேருக்கு கொரோனா தொற்று

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-29 17:07 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 28 ஆயிரத்து 921 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 ஆயிரத்து 236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 198 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 360 பேரின் பரிசோதனை முடிவு  வெளியானது. இதில் 48 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 969-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ஒருவர் கொரோனா தொற்றால் இறந்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும் செய்திகள்