தாளவாடி அருகே இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை

தாளவாடி அருகே இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது.

Update: 2021-07-28 22:01 GMT
தாளவாடி தாலுகா திங்களூர் ஊராட்சிக்கு உள்பட்டது காடட்டி கிராமம். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள பொதுமக்கள் சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் கர்நாடகா மாநிலத்துக்கு செல்ல பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த நிழற்குடையின் மேற்கூரை காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பொதுமக்கள் நிழற்குடை எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த பயணியர் நிழற்குடையை புதிதாக கட்டித்தர வேண்டும் என்று மலைகிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்