பி எஸ் என் எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

பி எஸ் என் எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

Update: 2021-07-28 17:49 GMT
பொள்ளாச்சி

கோபுரங்களை மேம்படுத்துவதன் மூலம் உடனடியாக 4 ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்க வேண்டும். 

மேலும் 5 ஜி சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு பொருளாளர் தங்கமணி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். மாவட்ட உதவி செயலாளர் மனோகரன் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். 

இதில் மாநில அமைப்பு செயலாளர் நிசார் அகமது, சி.ஐ.டி.யூ. ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயமணி, மாவட்ட உதவி தலைவர் சின்னான், நிர்வாகிகள் சுப்பிரமணிய சப்தகிரி, விஜேஸ்வரி, சிவசாபா, பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்