திருமக்கோட்டை அருகே மின்கம்பத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருமக்கோட்டை அருகே மின்கம்பத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருமக்கோட்டை,
திருமக்கோட்டை அருகே உள்ள தெற்கு தென்பரை பாமணி ஆற்றங்கரை அருகே மின் கம்பத்தில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்கில் பிணமாக தொங்கிய நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருத்துறைப்பூண்டி தாலுகா இடும்பாவனம் அடங்கியவிளாகம் கிராமத்தை சேர்ந்த உத்திராபதிசீனியம்மாள் மகன் முருகேசன்(வயது39) என்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி மின்கம்பத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.