காரைக்குடி
அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி காரைக்குடியில் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. பசுமை இயக்கத்தின் தலைவர் சிவக்குமார் தலைமையில் கிளையின் உறுப்பினர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது. இம்மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டுதோறும் பசுமை நேசன் விருது வழங்கப்படும் என்றும் பொறுப்பாளர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். விழாவை காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி தொடங்கி வைத்தார். சின்னத்திரை இயக்குனர் தமிழ்பாரதி, அங்காடித்தெரு புகழ் நடிகர் மகேஷ், பசுமை இயக்க செயலாளர்கள் முருகேஷ்பாபு, லண்டன் கண்ணன், சிறப்பு மருத்துவர்கள் காட்வின் சந்திப், அமலன் ஜான் மற்றும் பசுமை இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.