பள்ளி மாணவி கடத்தல் போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
சங்கராபுரம் அருகே பள்ளி மாணவி கடத்தல் போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆன் லைன் மூலம் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீரியூர் கிராமத்தைச் சேர்ந்த கொங்குநாட்டான் மகன் மணிமுத்து(வயது 19) மாணவியை கடத்தி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம்போலீசார் வழக்கு பதிவுசெய்து மாணவியுடன் மணிமுத்துவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி பஸ்நிலைத்தில் நின்றுகொண்டிருந்த மாணவியை போலீசார் மீட்டனர். மேலும் அவரை கடத்தி சென்ற மணிமுத்து, அதற்கு உடந்தையாக இருந்த வீரியூர் கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் ஸ்டாலின்(25) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.