திருச்சியில் குழந்தையை கடத்தியவர் கைது
திருச்சியில் பிச்சை எடுக்க குழந்தையை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
மலைக்கோட்டை
திருச்சி மேலசிந்தாமணி பழைய கரூர் சாலையை சேர்ந்தவர் ஹனிபா (வயது 45). இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தட்டு ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவரது இரண்டாவது மனைவி பூபதி. சத்திரம் பஸ் நிலைய பகுதியில் பிச்சை எடுத்து வருகிறார். இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 24-ந் தேதி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் பூபதி பிச்சை எடுத்து விட்டு அயர்ந்து தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் அருகில் இருந்த குழந்தையை அவர்களுக்கு அறிமுகமான பாண்டியன் என்பவர் வெளியூர் சென்று பிச்சை எடுக்க வைப்பதற்காக கடத்திச் சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து கோட்டை போலீசில் ஹனிபா நேற்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்ற உறையூர் கீழ வைக்கோல் காரத்தெருவை சேர்ந்த பாண்டியன் (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் குழந்தையை வெளியூர் கடத்திச் செல்ல முயன்ற பாண்டியன், அன்றைய தினம் இரவு மதுபோதையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச் சென்றதும், அந்த குழந்தையை ரயில்வே போலீசார் மீட்டு திருச்சி சைல்டு லைனில் ஒப்படைத்து உள்ளதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.