வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைபணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைபணம் திருட்டு

Update: 2021-07-26 16:05 GMT
வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை,பணம் திருட்டு
இடிகரை

கோவை சாய்பாபாகாலனியை அடுத்துள்ள கே.கே.புதூர் ரத்தினசபாபதி வீதியில் வசிப்பவர் சந்திரகலா (வயது 63). இவரது கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த வாரம் இவரது மகன் வீட்டிற்கு சென்னைக்கு சென்றுள்ளார். 

இவர் சென்னை சென்றதால் வீட்டில் வேலை செய்யும் சிவகாமி (53) என்பவரும் கடந்த ஒரு வாரம் வேலைக்கு வரவில்லை. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டம் மிட்ட மர்மநபர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை  உடைத்து உள்ளே சென்றனர்.

 பின்னர் வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து  அதில் இருந்த வளையல், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 25 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் மற்றும் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி குடம் ஆகியவற்றை  திருடிச் சென்றனர்.
இந்த நிலையில் சந்திரகலா வீட்டுக்கு வருவதாக கூறியதால் நேற்று காலை சிவகாமி வீட்டை சுத்தப்படுத்த சென்றுள்ளார். 

அப்போது வீட்டின் கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போடவே, அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது பீரோவை உடைத்து  நகை, பணம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்