22 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

22 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

Update: 2021-07-25 19:27 GMT
மதுரை
மதுரையில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 14 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 73 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 23 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 15 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 71 ஆயிரத்து 923 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 312 ஆக குறைந்துள்ளது. இந்தநிலையில், நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,142 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்